Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாதங்களாக விலை மாற்றமில்லை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:06 IST)
கிட்டத்தட்ட 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டந்த 281 நாள்களாக சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று 282வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகும் என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 விற்பனை ஆகி வருகிறது. 
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் எந்த விதமான விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments