Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (07:52 IST)
சென்னையில் சரியாக கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும். 
 
அதேபோல் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மற்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மாறி வந்தாலும் சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments