Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சில இடங்களில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 6 மே 2021 (07:38 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் கொளுத்தி வருகிறது என்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிகப்பெரிய அளவில் வெப்பம் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வெயில் கொடுமையிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமானால் அப்போது கோடை மழை பெய்தால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மிக அதிகமாக வெப்பம் இருந்த காரணத்தினால் மக்கள் அவதியுற்றனர். ஆனால் இன்று அதிகாலை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்
 
சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இதேபோல் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே சென்னை உள்பட தமிழக மக்கள் அக்னி நட்சத்திர வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments