தமிழகத்தில் இன்று கடைசி முழு லாக்டவுன்: வெளியே வந்தால் நடவடிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (07:12 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இதில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சமீபத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் அந்த முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5 ஆம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இருப்பினும் தமிழகம் முழுவதும் இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஞாயிறுகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று கடைசி ஞாயிறான 26ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 
இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் வெளியே வந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் இன்று அனுமதி இல்லை என்பதால் இன்று பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் 
 
அதேபோல் இன்று பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அனுமதி இல்லை என்றும் எனவே கடைகளை யாரும் திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கடைசி ஞாயிறு என்பதால் இன்றுடன் முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நார்மலான ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அதற்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா அல்லது ஊரடங்கு என்பது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் குளிர் அதிகம்!. காருக்குள்ள ஜாலி பண்னுங்க!.. பாடகரால் வெடித்த சர்ச்சை!...

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம்.. அப்படி போட்டால் இதுதான் நடக்கும்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

நெருங்கும் தேர்தல்!. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!...

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? துணை முதல்வர் வேட்பாளர் யார்?

திடீரென 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்.. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments