தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் தபால் வாக்கு பதிவு செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் தபால் வாக்குகள் அளிக்க தகுதி உடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நேரடியாக வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெறும் நடவடிக்கையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு இன்று மாலை 5 மணியுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இன்று ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இதுவரை தபால் வாக்குகள் செலுத்தாதவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.