தங்கம் விலை மீண்டும் சரிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:47 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ரூபாய் 4536.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 136 குறைந்து  ரூபாய் 36288.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4902.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39216.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 65.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65700.00 எனவும் விற்பனையாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments