Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகள் விடுமுறை

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (07:43 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பேய்மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னையின் புறநகர் பகுதி உள்பட பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மேலும் குடியிருப்புகளிலும் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.


 


இந்த நிலையில் நேற்றிரவும், இன்று அதிகாலை முதலும் சென்னையின் பல பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். அதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை நேரங்களில் விடப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்ட வரும் நாட்களில் சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments