Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை! போராட்டத்தை தடுக்க சதியா?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (08:25 IST)
பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு உள்பட நால்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று பொள்ளாச்சி, கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர்
 
இந்த போராட்டம் காரணமாக நேற்று பொள்ளாச்சியில் உள்ள சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாணவிகளின் போராட்டத்தை வலுக்கட்டமாக போலீசார் தடுத்து அவர்களை கலைய செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பாலியல் கொடூர விவகாரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் உள்ள ஒருசில கல்லூரிகளுக்கு 2வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை அளிக்கப்பட்டாலும் மாணவ, மாணவிகள் இன்றும் பொது இடங்களில் கூடி போராடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் வழக்கத்தை விட கூடுதலாக பொள்ளாசி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்