Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:17 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சர்ச்சை கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள் இடையே இருந்து வருகிறது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நிரந்தர முதல்வர் என அவரது ஆதரவாளர்களான ராஜேந்திர பாலாஜி உள்பட ஒரு சிலர் கூறி வருகின்றனர்
 
ஆனால் அதே நேரத்தில் செல்லூர் ராஜு உள்பட ஒருசில அமைச்சர்கள் தேர்தலுக்குப் பின்னரே முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என்று கூறி வருகின்றனர். எனவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை அவ்வப்போது நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கூட உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று செயற்குழு கூட்டம் கூடவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments