Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மீண்டும் மாற்றம்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (20:33 IST)
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என்ற நிலைகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதாவது  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாகவும் அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதாகவும், முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முதனிலைத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
 
மேலும் குரூப்-2 பிரதான தேர்வில் ஒரே தாள்களாக இருந்தது இரு தாள்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் தான் 2வது தாள் திருத்தப்படும் என்றும், பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்புமா? அல்லது ஆதரவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments