Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19ஆம் தேதி நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (08:50 IST)
மே 19ஆம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள தேர்வர்கள் வாக்களிக்கும் வகையில் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வரும் 19ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது இத்தேர்தலை கருத்தில் கொண்டும், ஒருசில நிர்வாக காரணங்களுக்காகவும், 19ஆம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான எழுத்து தேர்வை 25.05.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
 
இந்த தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மையங்களில் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments