Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரம் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி மூலம் 10 ஆயிரம் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு
, சனி, 30 ஜனவரி 2016 (10:23 IST)
டி.என்.பி.எஸ்.ஸி மூலம் 2016ம் ஆண்டுக்கான அரசு பணி தேர்வு குறித்த அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 10000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. குரூப்-4 பணிகளில் மட்டும் 4,931 காலியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பட உள்ளது. குரூப் 1 பணியிடங்களில் 45 காலியிடங்கள்,172 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை காணலாம்.


 

இது குறித்து  டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி கூறியபோது,

இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக நிரப்பப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் குரூப்-4 பணிகளில் (இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர்) மட்டும் 4,931 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், துணை ஆட்சியர், உதவி வணிக அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அலுவலர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 45 காலியிடங்கள் (குரூப்-1 பணிகள்), 65 உதவி ஜெயிலர் பணியிடங்கள், 172 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளும் அறிவிப்பில் இருக்கின்றன.முதல்முறையாக சுற்றுலா அதிகாரி (5 காலியிடம்) பணியிடமும், அரசுத்துறை நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடமும் (12 காலியிடம்) டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன என்று கூறினார்,

Share this Story:

Follow Webdunia tamil