போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: மின்சார வாரியம் எச்சரிக்கை

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (09:58 IST)
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளதாகவும், ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ள நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments