Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் : வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் : வானிலை மையம் அறிவிப்பு
, ஞாயிறு, 29 மே 2016 (15:05 IST)
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
அடுத்த இரண்டு நாள்களில் தமிழகத்தில் வெப்பம் படிப்பாடியாக குறையும். அதேபோல், அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
 
முக்கியமாக, வெப்பச்சலனம் காரணமாக வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று சூறைக்காற்றுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிமைகள் கழகமும், ஆமாம் சாமி கழகமும்: வெளுத்து வாங்கும் சுப.உதயகுமார்