அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுகவே விரும்புகிறது: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (11:26 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் ஒருசில மாதங்களில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. கருணாநிதி போல் ராஜதந்திரமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் ஆனால் அவர் துணிச்சலான முடிவை எடுக்காததால் ஆட்சி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியை கவிழ்ந்து சட்டமன்றத்தை கலைத்துவிட்டால் திமுக எம்.எல்.ஏக்களும் பதவி இழந்துவிடுவார்கள் என்பதால் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், அவரது எண்ணம் ஈடேறாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளார்.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'மடியில் கனம் இல்லாததால், எங்களுக்கு பயம் இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு முக்கியம் இல்ல.. தளபதியை பார்ப்பதுதான் முக்கியம்!.. தவெக மீட்டிங்கில் பெண்கள் பேட்டி!...

இறந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்திய பின்னர் உயிருடன் வந்த நபர்.. என்ன நடந்தது?

கழுதையின் உதவியால் நகைக்கடையில் கொள்ளையடித்த நபர்.. பிடிபட்டது எப்படி?

லிப்ஸ்டிக்கால் எழுதிய வெடிகுண்டு மிரட்டல் செய்தி.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

தவெக - காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்காது.. ஆனால் திமுகவை தோற்கடித்துவிடும்: அரசியல் விமர்சகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments