Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமை தொகை வாங்கும் பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (14:06 IST)
மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த மாதம் 12ஆம் தேதி தீபாவளி வர இருப்பதை அடுத்து முன்கூட்டியே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி தினமான 12ஆம் தேதிக்கு முன்பே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைத்தால் தீபாவளி செலவுக்கு உதவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த மாதம் மட்டும் பத்தாம் தேதி அல்லது 11ஆம் தேதி அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளுக்கு இது சர்ப்ரைஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments