இனி கோவில் நிதிநிலை அறிக்கையும் ஆன்லைனில்..! – புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (14:37 IST)
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்து விவரங்களோடு, நிதிநிலை அறிக்கையையும் பதிவேற்ற புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

சமீப காலமாக அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வருமானங்கள், செலவினங்கள் பற்றி வெளிப்படை தன்மை இல்லை என்றும், கோவில்களை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் நிலங்கள், கட்டிடங்களின் விவரங்கள், கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள், அலுவலர்கள், திருப்பணிகள், விழா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் விதமாக இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது அனைத்து கோவில்களின் வரவு, செலவு கணக்கு அடங்கிய நிதிநிலை அறிக்கையையும் ஆண்டுதோறும் அனைத்து கோவில்களும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments