Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறிய அவசர சட்டம்..

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (17:51 IST)
ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம் தமிழக சட்டசபையில் இன்று மாலை தாக்கல் செய்யப்பட்டது.


 

 
தமிழகத்தில் ஜல்லிகட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பட இடங்களில் இளைஞர்கள் போராடி வந்தனர். அந்நிலையில் கடந்த 21ம் தேதி, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. 
 
ஆனாலும், அவசர சட்டத்தை ஏற்க மாட்டோம். நிரந்தர சட்டம் வரும் வரை போராடுவோம் என கூறிய போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த போரட்டம் ஏறக்குறைய தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
 
இந்நிலையில், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அவசர சட்டத்தை, இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த சட்ட வரைவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை நிரந்தர சட்டமான நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. அதற்காக இந்த சட்ட வரைவு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 
 
அது குறித்து பேசிய முதல்வர் ஓ.பி.எஸ்  “குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால், இனி எந்த பிரச்சனையும் ஏற்படாது” என அவர் தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியரை பழிவாங்க நாற்காலியில் வெடிகுண்டு! - அரியானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி மாணவர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments