Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நீர் விவகாரம் ; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு

காவிரி நீர் விவகாரம் ; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (16:35 IST)
தமிழகத்திற்கு 3000 கன அடி திறந்து விடவேண்டும் என்ற காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

 
தமிழகத்திற்கு 3000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என,  காவிரி மேற்பார்வைக் குழு ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மறுசீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
 
கடந்த 20ம் தேதி, கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 21ம் தேதி முதல் வரும் 27-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
 
ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
 
இந்நிலையில், ஏற்கனவே காவிரி மேற்பார்வைக் குழு அளித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 3000 கன அடி நீர் போதாது என்று குறிப்பிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments