Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளித்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி!

Webdunia
திங்கள், 9 மே 2022 (13:02 IST)
சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 

 
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஆர்.ஏ.புரம். இந்த பகுதியில் ஏராளமான எளிய மக்கள் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் முதலாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
 
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனது வீடு இடிக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி முதியவர் ஒருவர் தீக்குளித்தார். தீயை அணைத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ. புரத்தில் தீக்குளித்த சம்பவமே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். 
 
அதோடு மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில் ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments