ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு.

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (17:31 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களையும் ஸ்டெர்லைட் ஆலையின் சொத்துக்களையும் சேதப்படுத்தியது தவிர்த்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன உளைச்சல் மற்றும் காயமடைந்த 93 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 குடும்பத்தினருக்கும் அரசு வேலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும் அந்த உத்தரவை இன்று முதல்வர் முக ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments