தமிழக ஆளுனர் திடீர் டெல்லி பயணம்: தமிழக அரசுக்கு ஆபத்தா?

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (18:57 IST)
தமிழகத்தில் தற்போது எத்தனை பிரச்சனைகளுக்காக போராட்டம் நடந்து வருகிறது என்று எண்ணுவது சுலபம் அல்ல. ஒருபக்கம் காவிரி மேலாண்மை வாரியம், இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட், ஒரு பக்கம் நியூட்ரியோனா திட்டம், இன்னொரு பக்கம் நெடுவாசல், ஒரு பக்கம் திரையுலகினர் இன்னொரு பக்கம் இன்சூரன்ஸ் கட்டணத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் என எந்த பக்கம் பார்த்தாலும் போராட்டம் தான் நடைபெற்று வருகிறது. மேலும் மெரீனாவில் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு போல் ஒரு புரட்சி வெடிக்க்கும் என அஞ்சப்படுகிறது

இத்தனை போராட்டங்களையும் சமாளிக்க வேண்டிய மாநில அரசும் உண்ணாவிரத போராட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதுமே கடந்த சில நாட்களாக பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.10 மணி விமானத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக கவர்னர் நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடுத்துள்ளதால் தமிழக அரசுக்கு ஆபத்தா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments