Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு?; 16 அமைச்சர்கள் கைது?: போலீஸ் குவிப்பு!

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு?; 16 அமைச்சர்கள் கைது?: போலீஸ் குவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (09:18 IST)
கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களை வைத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது.


 
 
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தேர்தல் ரத்து. விஜயபாஸ்கர் வீடு, சரத்குமார் வீடு என ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தின.
 
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு எதிரான ஆவணங்களும் இதில் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரை தங்கள் அலுவலகத்துக்கு வர வழைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகர் சரத்குமாரிடம் நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது.
 
இந்த விசாரணையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இதில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் தான் நிலவுகிறது. இதனையடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் ஆட்சி கலைய போகிறது என்கிற தகவல் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவியது.
 
அதில், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை, டெல்லியில் இருந்து தலைமை ஒற்றன் நேரடி தகவல். இன்று இரவு 12 மணிக்கு தமிழகத்தில் ஆட்சி கலைப்பு. பொறுப்பு கவர்னர் வருகை. ஆளும் கட்சியில் 10 முதல் 16 அமைச்சர்கள் கைது. ஆட்சியை கலைக்கும் படி மதியானமே அரசாணை தயார். என பரவலாக இந்த செய்தி பரவி வந்தது. இதனால் இரவு முழுவதும் பதற்றமான சூழலே நிலவி வந்தது.
 
இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இதனை அடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வருகின்றனர். விஜயபாஸ்கரின் வாக்குமூலத்தை வைத்து தமிழக அரசை கவிழ்க்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments