Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா – அதிர்ச்சியில் காங்கிரஸ்

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (10:56 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி காங்கிரஸார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது உடல்நல குறைவுக்கு உள்ளான கே.எஸ்.அழகிரிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments