எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆவின் மோர்! – 5 புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்திய முதல்வர்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:28 IST)
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தின் புதிய 5 பால் பொருட்களை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் பாலாடை கட்டி உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.

தற்போது புதிதாக ஐந்து பால் பொருட்களை ஆவின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். இஞ்சி, எழுமிச்சை, கடுகு, சீரகம், மிளகு, துளசி, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகிய நோய் எதிர்ப்பு சக்திகளை அளிக்கக்கூடிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆவின் சாக்கலேட் லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அன்றாட கடைகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆவின் விற்பனையகங்கள் அனைத்திலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments