மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதியம் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இந்நிலையில் முன்னதாக இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் குழுக்கடன் ரத்து உள்ளிட்டவற்றை முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பேச உள்ளார்.

இதனால் முக்கியமான வேறு சில திட்டங்கள் அல்லது நீண்ட கால பாமகவின் கோரிக்கையான வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments