Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் "டெல்லி திட்டப் பயண விவரம்" என்ன?

ஜெயலலிதாவின் "டெல்லி திட்டப் பயண விவரம்" என்ன?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (12:13 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மதியம் 2 மணி அளவில் டெல்லி செல்லும் அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
 
பின்பு, மாலை 4.30 மணி அளவில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்தி மோடி இல்லத்திற்கு சென்று, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
 
அப்போது, தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்தும், 34 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளிக்கிறார்.
 
ஜெயலலிதாவுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், முதல்வரின் செயலாளர்கள் வெங்கட்ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் உடன் செல்கின்றனர். பின்பு, தனி விமானம் மூலம்முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
 

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments