வெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர் சென்னை திரும்புகிறார்

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (07:29 IST)
பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு  நாளை சென்னை திரும்புகிறார்.
 
 
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட பிரிட்டன், அமெரிக்கா துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக முதலமைச்சர் பழனிசாமி சென்றார். அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும்போது முதல்வர் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வராகவே சென்றால்தான் தொழில் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்பதால் யாரிடமும் முதல்வர் பொறுப்பை அவர் ஒப்படைக்கவில்லை
 
 
இந்த சுற்றுப்பயணத்தில் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழக முதல்வர்  தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். மேலும் அவர் வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.
 
 
பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அவர் தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 13 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாளை அதிகாலை 2.40 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை திரும்புகிறார். அவரை விமான நிலையத்தில் சிறப்பாக வரவேற்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments