Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் பன்வாரிலாலுடன் முதல்வர் பழனிச்சாமி திடீர் சந்திப்பு! அமைச்சரவை மாற்றமா?

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (17:47 IST)
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்து திரும்பியுள்ள நிலையில் சற்றுமுன் ஆளுநரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆளுனருடன் ஒருசில முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர்  ஆலோசனை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுதலை செய்வது குறித்து  தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தக் கூடாது என முதல்வர் ஆளுனரிடம் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
 
அதேசமயம் தமிழக அமைச்சரவையில் ஒருசில மாற்றங்கள் செய்ய முதல்வர் முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து ஆளுனரிடம் வர் ஆலோசனை செய்ததாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் யார் புதிய அமைச்சர்கள்? யாருக்கு பதவி பறிபோகப்போகிறது என்பது குறித்து அதிமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது
 
இருப்பினும் ஆளுன்ரை சந்தித்த பின் தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்த பின்னரே இந்த சந்திப்பின் நோக்கம் தெளிவாக புரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments