தமிழகத்தில் கள்ளுக்கடை.. ரேசனில் சீனிக்கு பதில் கருப்பட்டி.. அண்ணாமலை வாக்குறுதி..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:37 IST)
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளுக்கடை திறக்கப்படும் என்றும் அதேபோல் ரேசனில் சீனிக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  பாதயாத்திரை செய்து வருகிறார் என்பதும் அவர் செல்லும் இடங்கள் எல்லாம்  பொதுமக்கள் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் ராமநாதபுரம் பரமக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செய்த போது உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷனில் ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை இந்த வாக்குறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments