Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கொள்கைகளை வீடு வீடாக எடுத்து செல்வோம்! – அண்ணாமலை உறுதி!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (14:52 IST)
தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை பாஜக கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வதாக உறுதி கூறியுள்ளார்.

தமிழக பாஜகவின் துணை தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர்.

தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கி இருக்கும் இந்த பதவி பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. பாஜக தமிழக மூத்த தலைவர்கள் வழிகாட்டுதல்களுடன் பாஜக தலைமை கொண்டுள்ள நம்பிக்கையை காக்கும் வகையில் செயல்படுவோம். பாஜகவின் கொள்கைகளை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments