Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்.. தற்காலிக பேருந்து நிலையங்கள்....

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்.. தற்காலிக பேருந்து நிலையங்கள்....

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்.. தற்காலிக பேருந்து நிலையங்கள்....
, சனி, 15 அக்டோபர் 2016 (12:29 IST)
தீபாவளியை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 21,289 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 

 
வருகிற 29ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதனால் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமனோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால், சென்னையிலிருந்து 11,225 பேருந்துகளும், மற்ற ஊர்களிலிருந்து 10,064 பேருந்துகள் என மொத்தம் 21,289 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
அக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை அந்த பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமில்லாமல், பல்வேறு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு வருகிற 26-ந்தேதி 3 ஆயிரத்து 254 பஸ்களும், 27ந்தேதி 3 ஆயிரத்து 992 பஸ்களும், 28-ந்தேதி 3 ஆயிரத்து 979 பஸ்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
 
தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் இருந்து 26-ந்தேதி 2 ஆயிரத்து 507 சிறப்பு பஸ்களும், 27-ந்தேதி 3 ஆயிரத்து 488 சிறப்பு பஸ்களும், 28-ந்தேதி 4 ஆயிரத்து 69 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 64 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
 
அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 21 ஆயிரத்து 289 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
 
தற்காலிக பஸ்நிலையங்கள்:
 
மக்கள் எந்தவித போக்குவரத்து நெரிசலும் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களாக அண்ணாநகர்(மேற்கு) பஸ்நிலையம், கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம்(மெப்ஸ்), பூந்தமல்லி பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
 
செங்குன்றம் வழியாக ஆந்திரா மாநிலம் செல்லும் பஸ்கள், அண்ணாநகர்(மேற்கு) மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து இயங்கும்.
 
கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
 
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் எஸ். இ.டி.சி. உள்பட அனைத்து வழித்தட பஸ்களும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
 
பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
 
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, செங்கானாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் பஸ்கள், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கல்யாணமே பண்ணிக்காதீங்க’ - சொல்வது யார் தெரியுமா?