Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து அதிரடி முடிவு எடுத்த ஜி.கே.வாசன்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:43 IST)
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து எதிர்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலவிய சூழ்நிலை காரணமாக ஒரு நல்ல நாகரிகமான, மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தோம்.
 
அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும், தமாகா லட்சியங்களை மக்கள் மனதில் பதியவைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை.
 
உள்ளாட்சித் தேர்தல் களத்தை தனித்தே சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக கடின உழைப்பை மேற்கொண்டோம். அதன் அடிப்படையில் தற்போது தனித்தே தேர்தலை சந்திக்கக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments