Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்

தமாக நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்
, சனி, 23 மே 2015 (14:22 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து, தமாக காங்கிரஸ் கட்சியைத் தொங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
 
இந்நிலையில், அக் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக என்.எஸ்.சி.விசித்தனும், தேர்தல் உயர்மட்டக் குழு தலைவராக பாரமலையும், தேர்தல் முறையீட்டுக்குழு தலைவராக வேலுவும் நியமிக்கப்பட்டனர்.
 
மேலும், சி.ஞானசேகரன், கோவை தங்கம் உள்பட 9 பேர் துணைத் தலைவர்களாகவும், ராம்பாபு, விஸ்வநாதன் உள்ளிட்ட 20 பேர் பொதுச்செயலாளர்களாகவும், 32 பேர் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநிலத்தலைவராக யுவராஜா நியமிக்கப்டப்பட்டுள்ளார்.
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில், இதுவரை 45 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக ஜி.கே.வாசன் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil