Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் தமாக: ஒப்பந்தம் கையெழுத்தானது

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (16:42 IST)
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 தொகுதிகளும், தேமுதிக 4 தொகுதிகளும், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்டமாக அதிமுக கூட்டணியில் இணைய தமாகவிடம் பேச்சுவார்த்தை நடந்தது
 
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அதிமுக - தமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமாக தலைவர் ஜி.கே.வாசன் கையெழுத்திட்டனர். அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
தமாக ஒப்பந்தத்துடன் அதிமுக கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது. இனி அடுத்தகட்டமாக எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு என்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments