Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள்: தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (16:28 IST)
திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள்
திருவொற்றியூரை சேர்ந்த திமுக எம்எல்ஏ கேபிபி சாமி மற்றும் குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் ஆகிய இருவரும் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக அடுத்தடுத்த நாட்களில் காலமானார்கள் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமானதை அடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதி உள்ளது. இதனை அடுத்து இரண்டு தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
மேலும் அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதி வரை தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் இருப்பதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியானால் 6 மாதத்திற்குள் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற விதி இருப்பதை அடுத்து விரைவில் இந்த இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்ற நிலையில் அந்த தொகுதிகளை திமுக தக்கவைத்துக்கொள்ளுமா? அல்லது அதிமுகவிடம் பறி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments