Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

Advertiesment
பள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி!
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:34 IST)
திருவண்ணாமலை அருகே பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள ஆரணியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மாணவி உடல்நலமின்றி இருப்பதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து இதுகுறித்து மாணவியிடம் விசாரித்ததில் மாணவியின் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதாளம் நோக்கி பாயும் பங்குசந்தை புள்ளிகள்?! – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி