Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவமனையில் மது போதையில் இருந்த டாக்டர்.. நோயாளிகள் அதிர்ச்சி..!

Mahendran
புதன், 11 செப்டம்பர் 2024 (16:40 IST)
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் பணிபுரியும் டாக்டர் மது போதையில் இருந்ததை பார்த்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் நேற்று இரவு டாக்டர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த டாக்டர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளை ஒருமையில் பேசியதாகவும் மருத்துவமனை ஊழியர்களையும் அவர் திட்டியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து மது போதையில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கியதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரை கைத்தாங்கலாக மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்று காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர்.

இன்று காலை அவர் போதை தெளிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் மது போதையில் மருத்துவமனையில் தூங்கிய சம்பவம் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை டீன் இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளை உள்ளன

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு பெண் அமைச்சர்கள் ராஜினாமா..!

வழக்கறிஞர் விலகியதால் நானே வாதாடுகிறேன்: நீதிபதியிடம் மகா விஷ்ணு கோரிக்கை..!

விநாயகர் சிலை ஊர்வலம் 40 சிசிடி கேமராக்கள்,2 டிரோன் கேமரா உட்பட 600கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!

25,000 ஏக்கர் தண்ணீர் இன்றி கருகும் அவலம்- விவசாயிகள் வேதனை......

தமிழகத்தில் மிகவும் மோசமான துறையாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது- நெல்லை முபாரக்!

அடுத்த கட்டுரையில்
Show comments