குளத்தில் மூழ்கிய சிறுமி, காப்பாற்ற முயன்று 5 பேர் பலி! – திருவள்ளூரில் சோகம்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (12:21 IST)
திருவள்ளூரில் குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற முயன்று ஒரே சமயத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் புதுக்கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் குளத்தில் அப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் அக்குளத்தில் வழக்கம்போல சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி ஒருவர் மூழ்கியதாக தெரிகிறது.

அந்த சிறுமியை காப்பாற்ற மேலும் சில சிறுமிகள் முயன்று அவர்களும் நீரில் மூழ்க அவர்களை காப்பாற்ற முயன்ற 38 வயது பெண்மணியும் நீரில் மூழ்கினார். இந்த விபத்து சம்பவத்தில் மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments