Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களின் ஆபாசப்படம் என்னிடம் உள்ளது – பெண்களுக்கு மிரட்டல் செய்தி விடுத்தவர் கைது !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (15:21 IST)
திருப்பூரில் பெண்களிடம் ஆபாசப் படங்களை வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்த நபரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முன்பின் தெரியாத ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ‘உங்களுடைய ஆபாசப்படத்தை நான் வைத்துள்ளேன். 5 லட்ச ரூபாய் தராவிட்டால் இணையத்தில் அதைப் பதிவேற்றிவிடுவேன்.’ எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக அந்த பெண் டுக்க காவல் ஆணையர் சஞ்சய் குமாரிடம் புகார் அளிக்க, துணை ஆணையர் இ.எஸ்.உமா மேற்பார்வையில் நடந்த விசாரணையில் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பவரை நேற்று பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ’அவர் ஐடிஐ முடித்தவர் என்பதும், அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதால் அதற்காக பணம் புரட்டுவதற்காக இதுபோல நூதனமான முறையில் ஈடுபட்டுள்ளார்.’ எனத் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments