நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே ஆடை உற்பத்திக்கு அத்தியாவசியமான நூலின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக நூல் விலை 120 முதல் 150 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பின்னலாடை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் நூலின் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும் இன்று திருப்பூர் முழுவதும் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் 200 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.