திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:09 IST)
கடந்த சில நாட்களாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திருப்பத்தூர் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட சுமார் 14 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments