Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் மீதான தடை நீக்கம்: ஆனால் ஒரு செக்; நீதிமன்றம் அதிரடி!!!

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (18:39 IST)
டிக் டாக் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், முத்துக்குமார் என்பவர் தாக்கல்செய்த மனுவில் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த டிக் டாக் தடை செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 
அதோடு, ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தனர். இதனை ஏற்று கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கப்பட்டது.
 
இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டிக் டாக் மீதான தடையை நீக்குவதாகவும் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துவது மாதிரியோ அல்லது ஆபாசமான வகையில் வீடியோ பதிவிட்டு வந்தாலோ நீதிமன்றம் தாமாக முன்வந்து டிக் டாக்கை தடை செய்யும் என்ற நிபந்தனையோடு டிக் டாக் மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments