Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு துவக்கம்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (12:34 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது.  


 

தீபாவளி பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வசதிக்காக அரசு பேருந்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல 21 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளிக்கு சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் பேருந்துகளில் முன்பதிவு  செய்ய ஆயத்தம் ஆகிவருகின்றனர். இதையடுத்து அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் முன்பதிவு மையங்களுக்கு சென்றும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வழக்கமான முன்பதிவு மையங்களை தவிர கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments