Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (19:27 IST)
இரவு பத்து மணி வரை தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கோடைகாலமாக இருந்தாலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் மழை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திருப்பூர், சேலம் , நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி , தேனி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments