Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு: இன்று ஓபிஎஸ் வீட்டில் குவியும் அமைச்சர்கள்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:23 IST)
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு அமைச்சர்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்குரிய வாதங்கள் நடைபெற்றது. ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் நேரடியாகவே வாக்குவாதம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டிற்கு திடீரென வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் சென்று அவரை சந்தித்து உள்ளார். 
 
அதுமட்டுமின்றி முதல்வர் ஈபிஎஸ் அவர்களின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களான தங்கமணி மற்றும் எஸ்பி வேலுமணி ஆகிய இருவரும் துணை முதல்வரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று மூன்று அமைச்சர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments