Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை எதிர்த்த முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்!

சசிகலாவை எதிர்த்த முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (10:37 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக வர சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ கே.சவுந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.
 
திருச்சியில் 1977 முதல் 1984 வரை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். தனியார் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதால் உடனே தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் மேலும் அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என பதவிக்காக அமைச்சர்கள் கூவுகிறார்கள் எனவும் கூறினார் அவர்.
 
இந்நிலையில் கே.சவுந்திரராஜனை சசிகலாவின் ஆதரவாளா்கள் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டாயா? இனி இப்படி பேசினால் கொலை செய்து விடுவோம் என்று தொலைப்பேசியில் மிரட்டியதாக தகவல்கள் வருகிறது.
 
இதனையடுத்து அவர் நேற்று திருச்சி மத்திய மண்டல காவல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. சசிகலாவை எதிர்த்த அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருப்பது அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments