Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!

தினகரனால் உயிருக்கு ஆபத்து: துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் மதுசூதனன்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (15:03 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட உள்ள மதுசூதனனுக்கு தினகரன் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் போட்டியிட உள்ள மதுசூதனனுக்கு கடந்த சில தினங்களாக போனில் கொலை மிரட்டல் வருவதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அதில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரனின் பெயரை சொல்லி பல்வேறு மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கூறப்பட்டுள்ளது.
 
எனவே தினகரன் தரப்பினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தனக்கு அளிக்க வேண்டும் என மதுசூதனன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments