Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1000 மரங்கள் ; 3000 மின் கம்பங்கள் - ருத்ர தாண்டபம் ஆடிய வர்தா புயல்

1000 மரங்கள் ; 3000 மின் கம்பங்கள் - ருத்ர தாண்டபம் ஆடிய வர்தா புயல்
, திங்கள், 12 டிசம்பர் 2016 (19:05 IST)
வர்தா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.


 

 
இன்று காலை முதல் சென்னையை மிரட்டிக்கொண்டிருந்தா வர்தா புயல் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. இதனால் காலை முதலே சென்னையில் பலத்த காற்று வீச தொடங்கியது.
 
முதல் கட்டமாக இன்று காலை புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. போகப்போக காற்றின் வேகம் அதிகரித்தது.  
 
3 லிருந்து 4 மணி வரை புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது. அப்போது சற்று அமைதி நிலவியது.   
 
இறுதியாக 4 மணி முதல் 7 மணி வரை புயலின் மூன்றாவது, அதாவது மையப்பகுதி கரையக் கடந்த போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. 
 
பலத்த காற்றின் காரணமாக சென்னையில் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் சரிந்து கீழே விழுந்தன. மொத்தம் 1000 க்கும் மேற்பட்ட மரங்களும், 3 ஆயிரம் மின் கம்பங்களும் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இவற்றையெல்லாம் சீரமைக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

GST மற்றும் OMR சாலைகளில் பயணிக்க வேண்டாம்: டிஜிபி வேண்டுகோள்