Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு
, வெள்ளி, 26 மே 2017 (05:55 IST)
சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தொடங்கும் இந்த தேர்வு ஜூலை 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு மே 29–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:



 


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக அடுத்த மாதம் 23–ந்தேதி முதல் ஜூலை 6–ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் வருகிற 29–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்–லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்–லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
அட்டவணை

தேர்வுக்கால அட்டவணை விவரம் வருமாறு:–

ஜூன் 23–ந்தேதி –தமிழ் முதல் தாள்

24–ந்தேதி –தமிழ் 2–வதுதாள்

27–ந்தேதி –ஆங்கிலம் முதல் தாள்

28–ந்தேதி –ஆங்கிலம் 2–வது தாள்

29–ந்தேதி –வேதியியல், அக்கவுண்டன்சி

30–ந்தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
கணிதம்

ஜூலை 1–ந்தேதி –கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்

3–ந்தேதி –கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்

4–ந்தேதி –தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங்(பொது), புள்ளியியல்

5–ந்தேதி– உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்

6–ந்தேதி –இயற்பியல், பொருளாதாரம்.  

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியுடன் இணைவார்களா கமல், அஜித், விஜய்?